வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது. அதைப்போல மீண்டும் ஒரு பாதிப்பு, வருகிற வாரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதாவது நாளை மறுநாள் (27-ந் தேதி) மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் திறக்காது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை வட மாநிலங்களில் ‘ஹோலி’ விடுமுறை. இப்படி தொடர்ந்து 3 நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படுகிறது. இடையில் மார்ச் 30-ந் தேதி வேலைநாளாக உள்ளது. 31-ந் தேதி வேலைநாளாக இருந்தாலும் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை முழுவதுமாக கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இதைப்போல அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 1-ந் தேதி வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள் என்பதாலும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். 3-ந் தேதி வங்கிகள் திறக்கும். ஆனால் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும்.
இப்படி அடுத்தடுத்து விடுமுறை ஆவதால் பொதுமக்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே ஆலோசனை செய்து வங்கி தேவைகளை உரிய நாளில் நிறைவேற்றிக்கொள்வதும், வங்கி திறக்காத நாட்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதும் நல்லது என்று நிதி ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி
சசிகலா த
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ
ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
திமுக தலைவர்
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
