சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமுக கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்வர் பழனிசாமியும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து ஸ்டாலின், திமுக எம்.பி.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கார்த்தி சிதம்பரம் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யம் ஒரு நிலையான கட்சி அல்ல. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட யாரும் இப்போது இல்லை; யாரும் தொகுதி பக்கம் கூட வரவில்லை. மக்கள் நீதி மையம் போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலின்போது மட்டும் ஒன்று கூடுவார்கள் அதன்பின் காணாமல் போவார்கள். கமல்ஹாசன், குஷ்பு போன்றவர்கள் தோல்விக்கு பிறகு தொகுதி பக்கமே செல்லமாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
இதை கண்டு கடுப்பான பாஜக வேட்பாளர் குஷ்பு, நாங்கள் அப்பாவின் பெயரை வைத்து கொண்டு நாடகமாடவில்லை; எதையும் சாதிக்கவில்லை; வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரவில்லை. எங்களால் சொந்தமாக உழைக்க முடியும்; வெற்றிபெற முடியும். உங்கள் பாதுகாப்பின்மை சிந்தனையை உடைப்பதற்கு மன்னிக்கவும்.உங்களை சுற்றியிருப்பவர்கள் ஒரு குடும்ப பெயரை வைத்து செல்வாக்கை பார்ப்பவர்கள். நானும் கமல்ஹாசனும் சொந்தமாக உழைத்து முன்னேறியவர்கள். உழைப்பு, நேர்மை தான் எங்களை இதனை தூரத்திற்கு கொண்டு வந்துள்ளது.
உங்கள் பாதுகாப்பின்மை மனப்பான்மையைக் காட்டி உங்கள் தந்தைக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தராதீர்கள்” என்றார். அத்துடன், ” நான் திமுக , காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தானாக வெளியே வரவில்லை. என் இருப்பு பலருக்கும் பயத்தை கொடுத்தது; அதற்கு நான் பொறுப்பல்ல: என்று குறிப்பிட்டுள்ளார்.