More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது!
இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது!
Mar 28
இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது!

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் , இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. 



இது நாட்டின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையிழப்பதற்கே வழிவகுக்கும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.



2021/2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கும் நிகழ்வும் முதலாவது கூட்டமும் நேற்று சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 



அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 



அங்கு அவர் மேலும் கூறியதாவது:



இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பக்கச்சார்பும் அச்சமுமின்றி செயற்படும் அதேவேளை, அதன் சுயாதீனத்தன்மை தொடர்ந்து பேணப்படும் என்றும் நம்புகின்றேன். 



நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் இறையாண்மை என்பன சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளன. 



அதுமாத்திரமன்றி சட்டத்தின் ஆட்சி, நீதி நிர்வாகம், சுயாதீன நீதித்துறை, மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகிய விடயங்களிலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.



எமது நாடு சர்வதேச தரம்வாய்ந்த சட்டத்தரணிகளை உருவாக்கியிருக்கிறது. எனினும் தற்போதும் விசாரணைகள் முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்படாமல் பெரும் எண்ணிக்கையான வழக்குகள் உள்ளன. 



இந்த நிலைமை நாடு என்ற ரீதியில் நாம் முன்நோக்கிச் செல்வதற்கு பெரும் சவாலாக உள்ளது. 



கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அவை மேலும் விரிவாக்கப்பட்டிருப்பதுடன் இரவுநேர நீதிமன்ற நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுகின்றன. 



எனினும் எமது நாட்டில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது நாட்டின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையிழப்பதற்கே வழிவகுக்கும்.



ஆகவே எமது நீதிமன்ற நடவடிக்கைகளின் செயற்திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 



நீதித்துறை மறுசீரமைப்பிற்காக வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



இதுவிடயத்தில் நாம் நெடுந்தூரம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. ஆகவே நீதிமன்ற செயற்பாடுகளை மேம்படுத்துகின்ற பொதுவான இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதà

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவà¯

Sep20

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக à

Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று

Dec14

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சà¯

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினà®

Apr09

இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படà

Feb12

நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ

Sep18

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி

Mar21

மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்à

Jan22

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிà

Apr03

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அà

Jun26

ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை à

Oct14

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இà

Jun14

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:17 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (04:17 am )
Testing centres