More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மனிதகுலம் விடுபட வேண்டும்- காளி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!
மனிதகுலம் விடுபட வேண்டும்- காளி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!
Mar 27
மனிதகுலம் விடுபட வேண்டும்- காளி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்து தனி நாடாக மாறியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த பற்றுதலின் அடிப்படையில், அந்த நாட்டின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.



அந்த அழைப்பினை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஓராண்டு காலமாக வெளிநாடு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக வங்காளதேச சுற்றுப்பயணம் அமைந்தது.



பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கினார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வந்து பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின் 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.



இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அந்நாட்டின் ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.



காளி கோவிலில் வழிபாடு நடத்திய பின் செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த சக்திபீடத்தில் உள்ள காளி அம்மனை வழிபட எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து மனிதகுலம் விடுபட வேண்டும் என காளி அம்மனிடம் நான் பிரார்த்தனை செய்தேன்.



காளி அம்மன் மேளா (கொடை விழா) இங்கு நடைபெறும்போது இந்தியாவில் இருந்தும் இங்கு வந்து பங்கேற்கின்றனர். இங்கு பல தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஒரு சமூக நலக்கூடம் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அப்போது தான் காளி பூஜை நிகழ்ச்சியின்போது இங்கு வருபவர்கள் தங்க வசதியாக இருக்கும்’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar07

சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது

Mar15

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர் à®

Mar02

சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவà®

Mar15

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க à

May09

உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில் à

Jan19

விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தà

Jul25

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கà®

Apr14

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உà

Mar07

ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பறà¯

May23

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்à®

Oct25

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மà®

Apr19

இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்கà

Aug31

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுà

Feb06

மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவனà¯

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:03 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:03 pm )
Testing centres