மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை 9.8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிருவாக பிரிவின் தலைவர் மேலதிக மன்றாடியார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவத்தன அவர்களின் அழைப்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உத்தியோக பூர்வ இல்லத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்கள்,நீதிபதிகள்,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்ஸி டி மேல்,காவல்துறையினர், இராணுவ அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்களினால் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது


தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைி
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
