More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி
காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி
Mar 20
காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. குறிப்பாக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி போன்ற முக்கிய மந்திரிகள் என ஏராளமான தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமாகினர். அவர்களில் பலர் பா.ஜனதாவில் தற்போது போட்டியிட சீட்டும் பெற்றிருக்கிறார்கள்.



இவ்வாறு நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, பர்மா மேதினிபூரில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது தனது கட்சியில் இருந்து விலகியவர்களை துரோகிகள் என அவர் வர்ணித்தார்.



இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது. இந்த துரோகிகள் தற்போது பா.ஜனதாவின் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள். இது அந்த கட்சியிலேயே காலம் காலமாக உழைத்து வரும் விசுவாசிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்போது வீட்டில் இருந்தே அழுது புலம்புகிறார்கள்.



கடந்த காலங்களில் நான் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது தலை, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்திலும் காயம் ஏற்பட்டு இருக்கின்றன. எனது கால்கள் மட்டும் தப்பியிருந்தன. ஆனால் தற்போது அவர்கள் என் காலை குறிவைத்திருக்கிறார்கள். நான் பிரசாரங்களில் பங்கேற்று விடக்கூடாது என்பதற்காக காலில் தாக்கினர். ஆனால் நான் ஒரு தெரு போராளி. என்னை அவர்களால் வீழ்த்த முடியாது.



இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போடà

May02

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ

Oct23

இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண

Aug03

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந

Jun28

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆதà

Aug09

கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்

Mar30

மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ

Sep10

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாà

Mar27

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பà

Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மநà¯

Feb09

இந்தியாவின்   கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரமà¯

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Apr19

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு

Mar23

ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்கà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:22 am )
Testing centres