இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இரவு நேரத்தில் பஸ், சுமேதாங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விட்டது. பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த கோர விபத்தில் 27 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்துக்கு காரணம் பஸ்சில் ‘பிரேக்’ செயல்படாதது தான் என விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் சாலைகள் மோசமாக இருப்பதால் விபத்துக்கள் நடப்பது சாதாரணமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு ஒரு பஸ் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
இங்கிலாந்து
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக் ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
