டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும். நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்த கொண்டாட்டங்கள், 12-ந்தேதி (நாளை) குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்குகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற எம்.பி.க்கள் அனைவரும் உதவ வேண்டும். பொதுமக்களை வாகனங்கள் மூலம் தடுப்பூசி மையத்துக்கு அழைத்துவர வேண்டும். தடுப்பூசி மையத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் உதவ வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் பிரதமர் மோடியின் திறமையான, உறுதியான தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் பேசினார்.
ஆப்கானிஸ்தானை
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே திமுக அரசு அனைத்து துறைகளிலும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ' ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந் இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய
