ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினை
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-
பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70
