இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தற்போது புதுவையில் உள்ள அரசியல் நிலவரம், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் முன்பு இருந்த கவர்னர் கிரண்பெடிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. ஆட்சி முடியும் நிலையில் அவசர அவசரமாக ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. இது அரசியல் அநாகரிகம். தேவையில்லாமல் நாராயணசாமிக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடி தந்துள்ளது.
தற்போது உள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதுவையில் நல்லாட்சி அமைய வேண்டும். இங்கு ஆன்மிக அரசியல் தான் வேண்டும். இது தொடர்பாக நான் ரங்கசாமியை விரைவில் சந்தித்து பேச உள்ளேன்.
புதுவையில் விவேகானந்தருக்கு சிலை அமைக்க வேண்டும். புதுச்சேரி என்றாலே மதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது. இதனை மாற்ற இங்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம
புதுச்சேரி மாநிலத்தில்
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச முதல்-அமைச்சர்
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு