சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனா பாதிப்பினால் முடங்கிக்கிடந்த அவர் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். இத்தகைய சூழலில் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளேன்; மக்களை விரைவில் சந்திப்பேன் என்று கூறிய சசிகலா திடீரென தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்; அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அறிவித்தது நெருக்கடி காரணமாக தான் என்று கூறப்படுகிறது.
அரசியலில் நீர்த்துப்போய்விடக் கூடாது என்பதாலும், அமமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொன்னால் அது அதிமுகவுக்கு எதிரானதாக மாறிவிடும் என்று எண்ணிய சசிகலா இந்தத் தேர்தலில் அமைதியாக இருக்க முடிவெடுத்தே ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சசிகலா ஆன்மீகத்தை நோக்கி செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. நாளை மறுநாள் ( மார்ச் 15 )முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிட்ட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று திநகர் அகஸ்தியர் கோயிலுக்கு சசிகலா வந்து சென்றுள்ளார். ஆடம்பரம், ஆரவாரம் இல்லாமல் வந்து சென்ற சசிகலாவை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர
நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி
தமிழகத்தில்
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட பள்ளி கல்வி கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேபுதுச்சேரி வில்லியனூர் அர
