விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம் தூக்கி எறியுங்கள் என்றுகட்சியினர் ஆவேச முழக்கம் எழுப்பி வந்தனர். ஆனால், வேறு வழியின்றி 6 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய தினம் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், சமூக நீதீயை பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். என் தம்பி இங்கு வர வேண்டியவர். பொறுத்திருந்து பார்ப்போம் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
கமலின் இந்த அழைப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசிக கட்சிக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை திமுக கொடுத்திருக்கிறது என்று கமலுக்கு பதில் கொடுத்தார் வைகோ.
இதையடுத்து திருமாவளவன், விசிக விருப்பமனு பெறுதலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது‘’திமுக தலைமையிலான கூட்டனி கட்டுக்கோப்பான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் 6 தொகுதிகளுக்கு உடன்பட்டோம்’’ என்றார்.
அவர் மேலும், ‘’புதிய கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுவதை விட பிரபலமான கட்சியில் 6 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை சிறப்பானதாக கருதுகிறோம்’’ என்று தெரிவித்தவர், ‘’மக்கள் நீதி மய்யம் தலைவரின் அழைப்புக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
சமூகவலைதளமான
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் தமிழக முதல்வர்
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத
