ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங்கைக்கு வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோன, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லூ ஸஹொஹியை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இதன்போது, அவர் இலங்கை தூதுவரிடம் சீனாவின் உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
பீஜிங்கில் உள்ள தூதுவருக்கு சீனா தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு, கொவிட்-19 தொற்றின் பின்னரான பொருளாதார நிலைமைகள், செயற்திறன்மிக்க கொவிட் பரவல் கட்டுப்பாடு மற்றும் எதிர்கால உயர்மட்ட விஜயங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு சீனாவின் ஆதரவையும் பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கான சீனாவின் சுற்றுலாத்துறை, வர்த்தகங்கள், கொழும்பு துறைமுக நகர மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலய முதலீடுகள் என்பனவற்றுக்கான ஆதரவையும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
