கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீத உயர்வு ஆகும். 6 வார காலம் சரிவை சந்தித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது ஏற்றத்தை சந்தித்துள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள் (14 சதவீதம்), தென் கிழக்கு ஆசியா (9 சதவீதம்), ஐரோப்பா (9 சதவீதம்), வட தென் அமெரிக்க நாடுகள் (6 சதவீதம்) ஆகியவற்றில் பரவல் அதிகரித்து இருப்பதே உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாகி உள்ளது.
பொது சுகாதார, சமூக கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை குறைகிறது. கடந்த வாரம் 63 ஆயிரம் புதிய இறப்புகள் பதிவாகி இருக்கின்றன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொட
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
