More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் 8.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!
அமெரிக்காவில் 8.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!
Mar 07
அமெரிக்காவில் 8.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.



அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8,79,12,323 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தகவலின்படி மொத்தம் 8,50,08,094 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அளவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 5,73,58,849 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டிருப்பதாகவும், 2,97,76,160 பேருக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் à®

Dec31

மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச

Mar15

போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா à

Jul03

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு

Jul23

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Mar10

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவருà

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதிà®

Mar04

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருகà¯

Mar15

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்குà

Apr09

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியà

Oct18

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா à

Apr19

மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய  தாக்குதல்

Feb06

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிகà®

Sep23

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கமà

Mar30

மியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (17:44 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (17:44 pm )
Testing centres