கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
“கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோரின் சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.
மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.
எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
இதேபோன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது



இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற் கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத் கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
