மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் சூகியின் ஆட்சியை புரட்சியின் மூலம் கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இதை ஏற்காத மக்கள், ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவம் ஆட்சிக்கு பயந்து, மியான்மரில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் எல்லை வழியாக தப்பி வருகின்றனர். சமீபத்தில், மியான்மர் காவல் துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வடகிழக்கு மாநிலமான மிசோராமுக்கு வந்து தங்கியுள்ளனர். இது பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது
.
இந்நிலையில், தப்பி வந்த போலீசாரில் 8 பேரை மட்டும் திருப்பி அனுப்பும்படி இந்தியாவுக்கு மியான்மர் ராணுவ அரசு கடிதம் எழுதியுள்ளது. அது கேட்டுள்ள போலீசார் அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை மட்டும் ஒப்படைக்கும்படி மியான்மர் ராணுவம் கேட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
"நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வ
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக ந
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
