புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றில் சுழற்றினாலே இசைபிறக்கும் புல்லாங்குழலை தயார் ஆச்சர்யபடுத்துகிறார் மணிராம் மாண்டவி. ‘ஸ்விங்கிங் புல்லாங்குழல்’ எனப்படும் இந்த கருவியும் மூங்கிலில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இந்த புல்லாங்குழலுக்கு ஒரு வாய் இல்லை, இரண்டு துளைகள் மட்டுமே உள்ளன. காற்றில் சுழற்றும்போது இதமான இசையை அது பிரசவிக்கிறது.
42 வயதான மணிராம், இந்த ஸ்விங்கிங் புல்லாங்குழல் செய்வதை முழு நேர தொழிலாக செய்து வருகிறார். ஒரு புல்லாங்குழல் 50 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயன்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் (ஓர்ச்சா) தொகுதியின் காடுகளில் உள்ள கோண்ட் ஆதிவாசி சமூகத்தின் குக்கிராமமான கட்பங்கலின் விளிம்பில் உள்ளது மணிராமின் பட்டறை.
இந்த புல்லாங்குழல்களுக்கான மூங்கில் நாராயன்பூர் நகரத்திலிருந்து எடுத்து வருகிறார் மணிராம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, காடு அருகிலேயே இருந்தது. அதனால், இந்த மூங்கில் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. இப்போது மூங்கிலை வெட்ட குறைந்தபட்சம் 10 கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்று சுருங்கி வரும் காடுகளைப் பற்றி அவர் சோர்வடைகிறார். பெரிய மரங்களால் நிரப்பப்பட்ட காட்டில் இனி பெரிய மரங்கள் இல்லை. அதனால் தொடர்ந்து ஸ்விங்கிங் புல்லாங்குழல் தயாரிப்பது கடினம்தான் என்றும் வேதனை தெரிவிக்கிறார்.
தனது 15வயதில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்ட பின்னர், 80வயதான மந்தர்சிங் மண்டாவியிடம் இந்தக்கலையை கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார் மணிராம்.
அந்த நாட்களில் காடுகளில் சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை விரட்டி அவைகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இத்தகையை கருவியை முன்னோர்கள் செய்ததாக தெரிவிக்கிறார் மணிராம்.
மணிராமுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். தன்னைப்போல் தன் பிள்ளைகள் இந்த தொழிலில் ஈடுபாடு காட்டுவதில்லை என்று மணிராம் வருத்தமுடன் தெரிவிக்கிறார்.
https://twitter.com/i/status/1365152311593422850