அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது முறையாக போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். அப்போது டிரம்ப் புதிய கட்சி துவங்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் ஓர்லேண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் டிரம்ப் பேசியதாவது: புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் எந்த திட்டமும் இல்லை. குடியரசுக் கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த போகிறேன். 3வது முறையாக, வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன்.
குடியரசு கட்சி நிலைத்திருக்கும், வெற்றி பெறும். அனைவரும் இணைந்து அமெரிக்காவின் சுதந்திர ஒளியை பரவ செய்வோம். பைடனின் கொள்கைகள் நாட்டை சோசலிசத்தை நோக்கி கொண்டு செல்கிறது. அதனை குடியரசு கட்சி ஒருநாளும் ஏற்றுக் கொள்ளாது. பைடனின் ஆட்சி, வேலை வாய்ப்பு, குடும்பம், எல்லை விவகாரம், எரிசக்தி, பெண்கள், அறிவியல் ஆகிய அனைத்துக்கும் எதிராக உள்ளது. பைடனின் ஆட்சி மோசமாக இருக்கும் என்பது அறிந்தது. ஆனால், இந்தளவு மோசமாக இருக்கும் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஒரே மாதத்தில், அமெரிக்கர்களுக்கு முதலில் முன்னுரிமை என்பது போய், கடைசி என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாà
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அà®
அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்à®
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் à
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியà®
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்பà®
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடமà
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்à®
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கà
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாà
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனதà
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகà
