ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சுவிஸ்மெடிக்' என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வ
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப
கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
