சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம்தேதி வரை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் சார்பில் 10வது ராணுவ கண்காட்சி நடைபெற்றது. முப்படையும் இணைந்து கண்காட்சி நடத்தியது இதுதான் முதல் முறை. 701 அரங்குகள் கொண்ட இந்த கண்காட்சியில் 47 நாடுகள் கலந்துகொண்டன. இந்தியாவின் 539 தளவாட உற்பத்தி நிறுவனங்களும், உலகநாடுகளின் 162 நிறுவனங்களும் இணைந்து இந்த அரங்குகளை அமைத்தன.
இந்திய ராணுவத்திற்கு தேவையான ராணுவபொருள் மற்றும் உதிரிப்பாகங்களை எல்லாம் உள்நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கும் விற்பனை செய்ய முடியும் என்பதை காட்டவே இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தினை வலியுறுத்தி உள்நாட்டிலேயே அதிநவீன அர்ஜூன்மார்க் 1ஏ பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கிவைத்து கலந்துகொள்வதற்காக கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் சென்னை வந்தார். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த சூழலில் பிரதமர் வந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
திமுக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள்பிரதமருக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ச் அணிந்தும், கருப்பு கொடிகாட்டியும், கருப்பு பலன்களை பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவித்தன.
மோடியே திரும்பிப்பிப்போ கருப்பு கலரில் ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர். இதனால் அதிர்ந்த போலீசார் முடிந்தமட்டிலும் பலூன்களை ஊசி வைத்து வெடிக்க வைத்தனர்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புதிய வசதிகளுடன் சென்னை ஆவடியில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜூன் மார்க்1 ஏ பீரங்கியை நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி.
இதுகுறித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘’2 ஆண்டுகள் முன்பு சென்னையில் பாதுகாப்பு வழித்தடத்தை மோடிஜி துவங்கி வைத்தது
அதன்மூலம் ஆயிரக் கணக்கானோருக்கு வேலை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்ட அர்ஜுன் பீரங்கி டாங்கி இன்று பிரதமரால் ராணுவத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
அன்று Go Back Modi என்ற தமிழக விரோத திக,திமுக, மதிமுக வெட்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.