அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்துறையினரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் காவல்த்துறையினரினால் வழங்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்த்துறை அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கல்முனை ,சம்மாந்துறை, சவளைக்கடை , காவல் நிலைய போக்குவரத்து காவல்த்துறையினரும் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது 117 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணி
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க
