ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார்.
எனவே அமெரிக்கா மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப ஜோ பைடன் நிர்வாகத்தை ஈரான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது பற்றி தீவிரமாக பரிசீலிக்கப்படும் என ஜோ பைடன் நிர்வாகம் கூறிவருகிறது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் படி ஈரான் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்பது நிபந்தனையாகும். ஏற்கனவே இந்த நிபந்தனையை மீறி விட்ட ஈரான் கடந்த மாதம் யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரித்தது.
இந்த நிலையில்தான் தேவை ஏற்பட்டால் யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றி
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் த
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ
