புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என குற்றம் சாட்ட முடியாது- திருநாவுக்கரசர்!
புதுச்சேரியில் ஆளும்கட்சி எம்எல்ஏக்களின் திடீர் ராஜினாமா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளது. எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி அரசு இழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ” புதுச்சேரியில் திமுகவை வளர்ப்பதற்காக ஜெகத்ரட்சகன் பேசியதை காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என குற்றம் சாட்ட முடியாது. உட்கட்சி பிரச்சினையை பயன்படுத்தி புதுச்சேரி அரசை பாஜக அரசு கவிழ்த்துள்ளது” என்றார்.
முன்னதாக புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், அண்மையில் புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையும். 30 தொகுதிகளும் திமுக வெற்றிபெறும். இல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 15 இடங்களிலும், திமுக 9 தொகுதிகளில் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுகவின் தயவால் தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது என்றார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
