நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 352 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிடம் மேலதிகமாக தடுப்பூசிகளை வழங்குமாறு கடந்த வியாழக்கிழமை, இலங்கை கோரியிருந்தது.
இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 500,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.
முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
