More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது-செந்தில் தொண்டமான்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது-செந்தில் தொண்டமான்!
Feb 11
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது-செந்தில் தொண்டமான்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது. அதையும் மீறி வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால், அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறதென இ.தொ.கா.  உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



அந்த பதிலடி, 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.



இந்தப் 13 நாட்கள் வேலை விடயம் தொடர்பில், பெருந்தோட்டக் கம்பனிகள் இதுவரையில் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் சில தொழிற்சங்கங்களே, பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊடகப் பேச்சாளர்களாக மாறி இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருகின்றன என்றும் தெரிவித்தார்.



13 நாட்கள்தான் தொழிலாளர்களுக்கு கம்பனிகள் வேலை வழங்குமாக இருந்தால், மிகுதி 17 நாட்களுக்கும், வெளித் தோட்டங்களில் இருந்தேனும் தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அவ்வாறு வெளித் தோட்டங்களிலிருந்து அழைத்து வந்தால் ஆயிரம் ரூபாய் சம்பளத்தோடு தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவுக்கான செலவுகளையும் ஏற்று ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 1,500 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையைச் செலவழிக்க எந்தக் கம்பனி தயாராக இருக்கும்?



அதனால், அந்த 13 நாட்களுக்கு மாத்திரம் குத்தகையைச் செலுத்துமாறும் ஏனைய 17 நாட்கள் தொழிலாளர்களின் பெயர்களில் குத்தகையைச் செலுத்தி தோட்டங்களை நடத்துவோம் என்றும் மிகுதி 17 நாட்களும் கம்பனிகள் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.



எவ்வாறாயினும் இத்தனை நாள்கள் வேலை வழங்க வேண்டுமென்று, கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளது. அந்த வழமையைக் கம்பனிகள் மாற்ற முடியாது. இன்றைய நிலைமைக்கேற்ற வேலைக்குத்தான் நாங்கள் இந்தச் சம்பளக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கூடுதல் வேலையாக இருந்தால், கூடுதல் சம்பளத்தைக் கோரியிருப்போம் என்றும் அவர் எடுத்துரைத்தார். அப்படி அவர்கள் வழமையை மாற்றினால் 16 கிலோ கிராம் பறிக்கப்படும் கொழுந்து 6 கிலோகிராமாகவும் 18 கிலோகிராம் பறிக்கப்படும் கொழுந்து 8 கிலோகிராமாக மாறும். இதனால் கம்பனிகளின் உற்பத்தியே பாதிக்கப்படும் என்றும் செந்தில் தொண்டமான் எச்சரித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு போராட்டம் என்பது புதிதல்ல. அதனால் எப்படியேனும் மக்களுக்குக் கொடுக்க வேண்டியதை இ.தொ.கா பெற்றுக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் தொடர்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, ரமேஸ் பத்திரன ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும் எக்காரணம் கொண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாதென அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதà

Oct11

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், à

Apr01

நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்திà®

May17

 31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநாà®

Feb02

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள

May02

நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்

Jan20

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நà

Mar17

கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின் à

Jan23

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காதà

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீடà¯

Sep27

நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனிà

Mar26

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூதà¯

Mar26

பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகளà¯

Oct04

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களிà®

Feb06

சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:36 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:36 am )
Testing centres