ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்வெலி ம்கைஸின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இதற்குப் பதிலாக, ஜோன்சன் & ஜோன்சன் (ஜே & ஜே) மற்றும் ஃபைசர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அடுத்துவரும் வாரங்களில் வழங்கப்படவுள்ளன.
அதேநேரத்தில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என தென்னாபிரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட
