More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை
சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை
Feb 07
சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.



அதன்படி முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.



இதற்கிடையே சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.



அதன்படி 2-வது டெஸ்ட் போட்டிக்கான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டிக்கெட் விற்பனை வருகிற 9-ந்தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-



இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 9-ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



2-வது டெஸ்டுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஐ.ஜே. மற்றும் கே ஆகிய 3 ஸ்டாண்டுகளின் இருக்கைகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.



9 ஆண்டுக்கு பிறகு அந்த 3 ஸ்டாண்டுகளிலும் ரசிகர்கள் அமர வைக்கப்படுகிறார்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது அந்த 3 ஸ்டாண்டிலும் ரசிகர்கள் இருந்தனர். பின்னர் விதிமுறை மீறல் காரணமாக அந்த 3 ஸ்டாண்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் 3 கேலரிகளும் திறக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ

Aug20

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டà

Jul22

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ

Oct01

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி

Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ரà

Jan17

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் à

Feb02

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோதà

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாà®

Oct30

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண

Feb21

இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட

Sep19

மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண

Jul25

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன

Oct20

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போடà

Jan20

பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர

Jun07

இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (20:35 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (20:35 pm )
Testing centres