More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிகவும் வலுவானதொரு அறிக்கையை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிகவும் வலுவானதொரு அறிக்கையை!
Feb 14
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிகவும் வலுவானதொரு அறிக்கையை!

சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார்



இலங்கை நீதி, சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான தேடல் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



குறித்த நிகழ்வில் ஸ்டீபன் ராப் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிகவும் வலுவானதொரு அறிக்கையை தயாரித்துள்ளார்.



அதற்கு எனது வரவேற்பினையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை சாட்சியங்களின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான ஆவணப்படுத்தல்கள் செய்ய வேண்டியதும் அவசியமானதாகும்.



மேலும் புள்ளிகளை இணைக்கும் வகையிலான ஆவணங்களை தயாரிப்பதும் அவற்றை நீதிக்கான செயற்பாட்டின்போது பொருத்தமான வேளைகளில் பயன்படுத்துவதும் முக்கியமாகின்றது.



இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போரின்போது படையினரிடத்தில் சுமார் 260 பேர் வரையில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் சரணடைந்துள்ளமைக்கு சாட்சியமாக அவர்களின் உறவினர்கள் இருக்கின்றார்கள்.



முரண்பாட்டு வலயத்தில் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதற்கான வலுவான சான்றுகளும் உள்ளன.



சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.



அதன்போது அவர், மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர் உள்ளிட்ட வெவ்வேறு வார்த்தைகளையே பயன்படுத்தினார்.



அதாவது சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல, சிறுவர்கள் கடத்தப்படுவது, பேருந்துகளில் படுகொலை செய்யப்படுவது மிகவும் மோசமான சம்பவங்களாகும். அவற்றுக்கும் வலவான ஆதாரங்கள் உள்ளன.



அவை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

Oct14

களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம

Jan21

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ

Mar06

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ

Mar18

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள

May22

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார

Mar04

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்

Jan27

இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்ற

Sep23

நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க

Feb04

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Mar09

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்

Jan12

இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர

Apr19

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா

Oct21

மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (06:17 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (06:17 am )
Testing centres