இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் திணறிக் கொண்டிருந்த சூழலில், இந்தியா குறைந்த காலகட்டத்திலேயே ஒன்றுக்கு இரண்டாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நம் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல், பிற நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், அன்று தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,08,92,746 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,55,550 ஆக அதிகரித்துள்ளதாகவும் 11,395 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால் 1,36,571 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று உயிரிழப்புகளும் பாதிப்பும் சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம
சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்
சுகாதாரத்துறை
தமிழகத்தில்
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்
