வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனா அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு மூன்றாக உயர்ந்துள்ளதுடன், வடக்கில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியமை தொட
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
