உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஐ.பி.செந்தில்குமார், அன்பில் மகேஷ், கவுதம சிகாமணி, கலாநிதி வீராசாமி
எ.வ.வே கம்பன், கார்த்திக்மோகன் இவர்கள் எல்லாம் திமுக கொடிபிடித்து ரத்தம் சிந்தி சிறை சென்ற தியாகிகள் என்று நினைக்காதீர்கள், கோடிகளை வைத்திருக்கும் திமுக தலைவர்களின் வாரிசுகள் என்று சொல்லும் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் காயத்ரிரகுராம்,
’’எந்த அடிப்படை தகுதியுமின்றி வாரிசு என்கிற தகுதியோடு மட்டுமே எம் பி , எம் எல் ஏ, மாவட்ட செயலாளர்கள் என பதவிகளை அலங்கரிப்பவர்கள். கொடிபிடித்த தொண்டன் கடைசி வரை தொண்டனாகவே சாகவேண்டும். இது திமுகவின் சாபக்கேடு, அண்ணா சொன்ன ஏழை, எளிய, பாட்டாளிகளின் கட்சி திமுக என்பது கருணாநிதி, ஸ்டாலின் காலத்தில் கோமான்கள், செல்வ சீமான்களின் குடும்ப கட்சியாகிவிட்டது’’என்கிறார்.
‘’நீட் தேர்வை எந்த நிலையிலும் ரத்து செய்யமுடியாது என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லிவிட்ட பிறகும் ஊர் ஊராக சென்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்னு சொல்லிவரும் உதயநிதி அப்படி செய்யமுடியவில்லை என்றால் அரசியலை விட்டே விலகத்தயாரா?’’என்ற கேள்வியை எழுப்புகிறார்.
’’உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் யாராவது விளக்குவார்களா? நீட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்ட துரோகிகளான நீங்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஏழை எளிய மாணவர்களை ஏமாற்றுவீர்கள்’’என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.