பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின் பேரணியில் குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராஜதந்திரியொருவருக்கு பெல்ஜியம் நீதிமன்றம் 20வருடசிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
வியன்னாவில் உள்ள ஈரானிய தூதரகத்தில் பணியாற்றிய அசாதொல்ல அசாடி என்ற 49 வயது பெண் இராஜதந்திரிக்கே நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
2018இல் பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற பேரணியிலேயே குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என அதிகாரிகள் இராஜதந்திரிக்கு எதிராக குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர்.
இந்த பேரணியில் டிரம்பின் சட்டத்தரணியும் கலந்துகொண்டிருந்தார்.
ஈரானின் புலனாய்வு அமைச்சே இந்த சதிதிட்டத்தை தீட்டியது என தெரிவித்த பிரான்ஸ் அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகள் இருவரினது சொத்துக்களை பறிமுதல் செய்தது.
ஜேர்மன் பிரான்ஸ் பெல்ஜியம் ஆகியன இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
டெஹ்ரான் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
1979ம் ஆண்டு ஈரானிய புரட்சிக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானிய அதிகாரியொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர
