கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பயிற்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
டென்னிஸ் வீரர்கள் ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு தனிமை முகாமில் 14 நாட்கள் தங்கியிருந்தனர். 14 நாட்களை நிறைவு செய்த பின்னர், வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஹோட்டலில் தனிமை முகாமில் இருந்த 520 டென்னிஸ் வீரர்கள் மற்றும் பணியாளர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தனிமை முகாமில் இருந்து வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பயிற்சி போட்டிகள் இரத்தாகியுள்ளன. எனினும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 8ஆம் திகதி மெல்பேர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத
ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
