மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.
மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது. இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்’ என கூறினார்.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் விட்டோ பலம் கொண்ட ஓரு நிரந்தர உறுப்பினரான சீனா, மியன்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டிக்க மறுப்பதால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க முடியாதுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மியன்மாரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. ரொஹிஞ்சா முஸ்லிம்கள் பிரச்னையின் போது கூட, சீனா ரஷ்யாவோடு இணைந்து மியன்மாரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்தது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
அமேசான் நிறுவனர்
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
