இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த உறவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா நோய்க்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும
அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
தே.மு.தி.க. தலைவர்
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
