வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்பதால் தான் அவர் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர். சட்டப் போராட்டம் தொடரும். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கூறினார்.
கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சசிகலா சிறைக்கு சென்றவுடனே கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக கொடியை அவர் பயன்படுத்த உரிமையில்லை என போர்க்கொடியை உயர்த்தினர்.
இந்த நிலையில் தான், அதிமுக கொடியை பயன்படுத்த எல்லா உரிமையும் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததிற்கே இவ்வளவு பிரச்னை என்றால், தமிழகம் வந்தால் அரசியல் களத்தில் ‘ஒரு சம்பவமே காத்திருக்கு’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாà
சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்à® தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தாà® தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடநà இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றà இந்தியாவில்
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்à® தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்à 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆà® தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன௠மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய 1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத à
