மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.
முதலாவது கொவிட்-19 தடுப்பூசியை மன்னார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.கே.வின்சனுக்கு செலுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோருக்கு செலுத்தியுள்ளனர். பின்னர் சுகாதார துறையிருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதேவேளை மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் 2ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள், 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான
