தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு கோரி நாடளாவிய ரீதியிலான ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கு இடையில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் அவை தீர்மானமற்ற நிலையில் முடிவுக்கு வந்தன.
இந்த நிலையிலேயே எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியிலான ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து புளத்சிங்ஹல நகரத்தில் நேற்றைய தினம் எதிர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
