யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகளில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூத்தில் 373 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட் முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண