மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இந்தநிலையிலேயே அங்கு இராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனால் ஆங் சான் சூகி, இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்தோடு, ஆங் சான் சூகி உள்ளிட்ட மேலும் சில தலைவர்களும் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் தற்போது, அந்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச
தலிபான்கள்
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிற ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து
