கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஏதென்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தில், கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் பனகியோடோபஒவுலோஸ் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் ‘பல திசைகளில் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது’ என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இயற்கை எரிவாயு வளங்கள் மற்றும் அந்தந்த கடற்கரைகளுக்கு வெளியே உள்ள கடலில் கடற்படை செல்வாக்கு தொடர்பாக துருக்கியுடனான மோதலில் பிரான்ஸ் கிரேக்கத்தை கடுமையாக ஆதரித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கிரேக்கம் 18 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதைக் காணும், அவற்றில் பிரான்ஸின் வான்படையின் பாவனையில் உள்ள 12 விமானங்களும் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தில் உதிரிப்பாகங்களும், ஆயுதத் தளபாடங்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
