சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.
* சசிகலா 4வது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார்.
* சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய் இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை