வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.
இந்த தகவலை வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
மேலும் வட.மாகாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விபரங்களை சுகாதார அமைச்சுக் கோரியிருந்தது.
அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.
அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள AFT தி
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன