கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதியின் ஆலோசகர் லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளை வழங்கும் நடவடிக்கை சுயவிருப்பத்தின் பேரிலேயே முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்தினை பயன்படுத்துபவர்கள் அதற்கு முன்னர் மருந்தினை பயன்படுத்த சம்மதிக்கும் படிவமொன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் மருந்தினை பெறுவதற்கு தயங்கியவர்கள் பின்னர் தங்கள் மனதை மாற்றினால் அவர்கள் குறிப்பிட்ட நிலையங்களில் தங்களிற்கான மருந்தினை செலுத்திக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் சுகாதார அமைச்சுக்கு வழங்கிய மருந்துகள் நாளை எயார் இந்தியா விமானம் மூலம் இலங்கை வந்தடையும். அந்த மருந்துகள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள லலித்வீரதுங்க அவற்றை விசேட குளிரூட்டப்பட்ட டிரக்குகள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட