போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக நாட்டின் அநேக மாவட்டங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் 12 மாடி கார் தரிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன.
இதன்படி கொழும்பு 07இலுள்ள நொரிஸ் கனல் வீதியில் கண் மருத்துவமனைக்கு சமீபமாக கார் தரிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கொழும்பு பொது மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி வாகனத் தரிப்பிடவசதிகள் இல்லாததால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலை அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிப்பதில் பாதகமான விளைவையும் ஏற்படுத்துகிறது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரமளித்தது.
இதன் முதலாவது திட்டம் கொழும்பு லேக்ஹவுஸ் அருகே தொடங்கியுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்காக 1.113 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, டி.எஸ்.சேனநாயக்க மாவத்தை சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் வாகனத் தரிப்பிடங்கள் கட்டப்படுவதுடன் பத்தரமுல்ல, அநுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களிலும் கார் தரிப்பிடங்களை அமைக்கும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ
நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ