கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டுள்ளது.
வவுனியா- பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.
மேலும் வவுனியா நகரப் பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில், பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக நிலையங்கள், சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி