புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியிலுள்ள தனது வயலை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பியபோது, நடந்துவரும் பாதையின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போது மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அவரை மாற்றியுள்ளனர்.
அண்மையில் பெய்த மழையினால் காட்டில் வெள்ளநிலை வற்றாத நிலை காணப்படுகின்ற நிலையில் காட்டிலுள்ள யானை, கரடிகள் மேட்டு நிலங்கள் நோக்கி வந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
