காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சுதந்திரத் தினத்தன்று வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரி நான்காம் திகதி தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாகும். எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி, வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8.30 மணிக்கு கந்தசுவாமி ஆலைய முன்றலில் பேரணி ஆரம்பமாகும். கிழக்கு மாகாணம் சமநேரத்தில், மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.
இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
