மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும், 2 ஊழியர்களும் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கொரோனா நோயாளிகள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறிப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தனர்.
குறித்த நால்வருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய
கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா